கணவனின் அன்பே மனைவியின் வாழ்க்கை.
-ஜெர்மனி
தோட்டத்தின் நன்மை வேலி; வீட்டின் நன்மை குடியிருப்பு, பெண்ணின் நன்மை கணவன்.
-மலாய்
மனையாளின் குற்றங்களுக்குமணவாளனே பொறுப்பு; குரங்கு வளர்ப்பவன் அதன் சேட்டைகளுக்குப் பொறுப்பாளி.
-இங்கிலாந்து
ஒடுக்கமான வீட்டில் விகாரமான மனைவியை உடையவனுக்குக் கவலையே யில்லை.
-( ,, )
அதிருஷ்டமுள்ளவன் மனைவியை இழக்கிறான், அதிருஷ்டமில்லாதவன் குதிரையை இழக்கிறான்.
- ஜியார்ஜியா
மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும் உடந்தைதான்.
-லத்தீன்
கணவன் என்பவன் தன் மனைவியின் தந்தை.
-ரஷ்யா
ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது.
- ருமேனியா
ஏழு வருடங்கள் கழியுமுன்னால் உன்மனைவியைப் புகழாதே.
-ரஷ்யா
அதிருஷ்டத்தில் உயர்ந்தது நல்ல கணவன் வாய்ப்பது,
அடுத்தது நல்ல வேலைக்காரன் வாய்ப்பது.
- செர்பியா
மனிதனுக்குச் சந்தோஷம் இரு தடவைகள் வரும்: ஒன்று மனைவியை அடையும் பொழுது, மற்றது அவளைப் புதைக்கும் பொழுது.
-( ,, )
அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன்.
- ஸ்பெயின்
உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச்
சொன்னால், 'கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!' என்று பிரார்த்தனை செய்து கொள்.
-ஸ்பெயின்
மனிதன் தலை, பெண் தொப்பி.
-சுவீடன்
பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு மூன்று நாள் ஓய்வு கொடுத்து, தானும் மூன்று நாள் பட்டினியிருப்பான்.
- சுவிட்சர்லந்து
உலகம் மெச்சும் நல்லவனை அவன் மனைவி மட்டும் மோசமானவனாகக் கருதுவாள்.
-யூதர்
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால், கணவனுக்கு அமைதி கிடைக்கும்.
-ஆப்பிரிக்கா
கணவர்களே, உங்கள் மனைவியரை நேசியுங்கள், அவர்களுக்கு எதிராகக் கொடுமையாக இருக்கவேண்டாம்.
-பு. ஏற்பாடு
நல்ல கணவனானால், மனைவியும் நல்லவளாயிருப்பாள்.
- இங்கிலாந்து
நல்ல மனைவியால் கணவனும் நல்லவனாவான்.
-( ,, )
செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி-இந்தத் தம்பதிகள் இன்பமா யிருப்பார்கள்.
-( ,, )
கணவர்கள் வானுலகம் சென்ற பிறகே மனைவியின் ஏச்சு நிற்கும்.
-( ,, )
கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம்.
-( ,, )
கணவர்கள் அடங்கிப் போவதால்தான், மனைவியர் வெறி அதிகமாகின்றது.
-( ,, )
புருடன் இறந்ததும், அண்டைவீட்டுக்காரர்கள் அவனுக்கு
எத்தனை குழந்தைகள் என்பதை அறிகிறார்கள்.
-( ,, )
கக்கரவர்த்திகளும் தங்கள் மனைவியருக்கு வெறும் கணவர்களாகவே தோன்றுவர்.
-பைரன்
ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல்.
- ஸ்பெயின்
கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள்.
-ஸ்பெயின்
கணவன் விதிக்கும் தளைகளால் தழும்பு உண்டாகாது.
-ரஷ்யா
அன்பில்லாத கணவன் பொறாமையுள்ள கணவனைவிட மேலானவன்.
-இதாலி
தன் குடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்து கொள்பவன் கணவன்.
-லத்தீன்