பல்லக்கில் இருப்பவன் மனிதன், பல்லக்குத் தூக்குபவனும் மனிதன் தான்.

-சீனா

உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி.

-ஆர்மீனியா

உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி.

-( ,, )

ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்கவேண்டும்.

- இதாலி

மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை.

-லத்தீன்

நீ கடலுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆறு.

-( ,, )

மனிதன் நடமாடும் பிணம்.

- ரஷ்யா

ஒருவன் பூரண மனிதனாக விளங்க வேண்டுமானால், அவன்

பொதுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும், பல்கலைக் கழகத்தில் xராண்டும், சிறையில் இரண்டாண்டுகளும்

கழித்திருக்க வேண்டும்.

-( ,, )

ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே.

-ஸ்பெயின்

மெலிந்தவனை அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை.

-ஆப்பிரிகா

மனிதன் தானே தனக்குச் சயித்தான்.

-இந்தியா

மலை இடம் பெயர்ந்து விட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனால் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம்.

- அரேபியா

மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள்.

-( ,, )

மேலான மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கின்றது; சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது.

-கன்ஃபூஷியஸ்

மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன்.

-ஹாலந்து

வெட்கம் மனிதனை விட்டு விலகி நின்றால், அவன் விலங்காவான்.

-சுவின்பர்ன்

தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன்.

-இங்கிலாந்து

மனிதன் இயற்கையில் ஓர் அற்புதம்.

-இங்கிலாந்து

மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே.

-( ,, )

சிரிக்கும் மிருகம் மனிதன் ஒருவன் தான்.

-( ,, )

வெட்கப்படும் விலங்கு மனிதன் ஒருவனே.

- மார்க்ட்வெயின்

மனிதர்களுக்கு மனம் பளிங்கு, பெண்களுக்கு மனம் மெழுகு.

-ஷேக்ஸ்பியர்

இரக்கமற்ற தன்மையைக் காட்டிலும் மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை.

-ஸ்பென்ஸர்

புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம்.

-ஃபிரான்ஸ்

மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான்.

-ஜெர்மனி

மிருகத்தையும் அதிமானிடனையும் பிணைத்துக் கட்டும் கயிறு மனிதன்.

-நீட்ஷே

(மனிதனே தன்னிலும் மேம்பட்ட அதிமானிடனாகப் பரிணமிக்க முடியும் என்ற கொள்கையுடையவர் நீட்ஷே, என்ற தத்துவஞானி.)
மனிதனுக்கு மனிதன் கடவுள்.

- கிரீஸ்

பெரும்பாலான மனிதர் தீயவர்.

-( ,, )

மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு.

-லத்தீன்

மனிதன் தனக்கு எவ்வளவு வேண்டியவனோ அதைவிட அதிகமாகத் தேவர்களுக்கு வேண்டியவன்.

-( ,, )

மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான்.

-( ,, )

மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப் பொருளாவான்.

-செனீகா

ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது.

-யூதர்

Please join our telegram group for more such stories and updates.telegram channel