4. பெருஞ்சோறு

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும் பலர் போர்க்களத்தில் உணவில்லாமல் உலர்கின்றனர்.
இக்கொடுமை கண்டான் தமிழ் மன்னன் ஒருவன்.அவர் பெயர் உதியஞ்சேரலாதன். போர்வீரர் துயருறுவதைக் கண்டு, அவர்களுக்கு உதவி செய்யுமாறு அவன் அருள் உள்ளம் உந்தியது.
தாகம் என்றவர்க்குத் தண்ணீரும் பசித்தவர்க்கு உணவும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தான். இன்னர் இனியார் என்னாமல் இருதரப்பினர்க்கும் உதவி செய்தான்.
அவன் செய்த உதவியால், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.
முதற்சங்கத்துப் புலவராகிய முரஞ்சியூர் முடிநாகராயர் என்பார் அவனைப் பாராட்டிப் பாடினார்.

 

 “அலங்குளைப் புரவி ஐவரொடு சிணைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை 
ஈரைம் பதின்மரும் பொருது களத்துஒழியப் 
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”

 

என்பதே அப்பாடல்.
இங்கே கண்ட செய்தி எக்காவியத்திலும் இடம் பெறாமல் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கி வந்துள்ளது. இதே செய்தியைச் சிலம்பும் பெரும்பாணாற்றுப்படையும் கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel