←இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி
இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி→
418945சேதுபதி மன்னர் வரலாறு — இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதிஎஸ். எம். கமால்
இயல் - IVஇராஜ சூரிய சேதுபதி
ரெகுநாத திருமலை சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் திருமலை ரெகுநாத சேதுபதியின் சகோதரர் ஆதிநாராயணத் தேவரின் மகன் இராஜ சூரியத் தேவர் சேதுபதியாகப் பட்டமேற்றார். இவரது ஆட்சிக்காலம் மிகக்குறுகிய ஆறுமாதங்களுக்குள் முடிவுற்றது. அப்பொழுது தஞ்சாவூரில் இருந்த அழகிரி நாயக்கருக்கும் திருச்சியிலிருந்த சொக்கநாத நாயக்கருக்கும் ஏற்பட்ட பூசலில் தலையிட்டுச் சமரசம் செய்ய முயன்ற போது தஞ்சைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கரால் கைது செய்யப்பட்டு திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.
இவரது பெயரால் இராமநாதபுரம் நகருக்குத் தெற்கேயுள்ள சக்கரக் கோட்டைக் கண்மாயின் தென் கிழக்கு மூலையில் உள்ள கலுங்கும்
அதனை அடுத்துள்ள சிற்றுாரும் இராஜசூரியமடை என்று இன்றும் வழங்கப்பட்டு வருகின்றன.
11. அதான ரகுநாத சேதுபதி
இராஜ சூரிய சேதுபதி காலமானதையொட்டி அவரின் இளவல் அதான ரகுநாதத் தேவர் சேதுபதியாக முடிசூட்டிக் கொண்டார். துரதிஷ்டவசமாக அடுத்த சில மாதங்களுக்குள் இவரும் நோய்வாய்ப்பட்டு மரணமுற்றார்.